முத்தமிழ் அறிஞர் கலைஞர்
என் உயிரினும் மேலான கலைஞரே!
திருக்குவளை ஊரில் பிறந்த திருவருளே!
அஞ்சுகம் அம்மை பெற்றெடுத்த அஞ்சாநெஞ்சனே!
முத்துவேலர் கண்டெடுத்த முத்து சிற்பியே!
நல்விடியலைக் கொடுத்த திராவிட சூரியனே"!
தமிழனின் தலையெழுத்தை மாற்றிய எழுத்தாளரே!
தமிழன்னை கையில் தவழ்ந்தவரே!
தமிழ் மாநாடு வைத்து தமிழை வளர்த்தவரே!
ஈழத்தமிழர் வாழ்விற்கு குரல் கொடுத்தவரே!
தமிழினத் தந்தையே!
தமிழகத்தின் காவலனே!
தமிழ்நாட்டிற்கு உயிர் கொடுத்த டாக்டர் கலைஞரே!
கலைகளை வளர்த்த எங்கள் கலைஞரே!
காலத்தை வென்றவரே!
காலமெல்லாம் உழைத்த கலைஞரே!
கதை ,வசனம் மூலம் சமூகத்தை மாற்றிய கலாரசிகனே!
வள்ளுவனுக்கே கோட்டம் அமைத்தவரே!
வள்ளுவன் வழி நடந்தவனே!
தென்பாண்டி சிங்கத்தை கொடுத்த ராஜராஜனே!
இளஞ்சூரியனை விட்டுச்சென்ற விடியலே!
தமிழனைக் காக்க தவப்புதல்வனை விட்டுச்சென்ற தலைவரே!
உலகம் போற்றும் உழைப்பாளியே!
மக்கள் மனதை என்றும் ஆளும் அரசனே!
ஓய்வுக்கே ஓய்வு கொடுத்தவரே!
வாழ்ந்து காட்டிய சகாப்தமே!
என்றும் நீ வாழி!
உன் புகழ் வாழி!
இப்படிக்கு
உங்கள் ஆசிரியை
வெ.சந்திராதேவி

0 Comments