என் எழுத்தாணியின் ஏக்கம்






என் எழுத்தாணியின் ஏக்கம் 

ஈரேழு உலகத்தை 
இரண்டடியில அளந்து 
வாழ்வின் அர்த்தம் 
முழுவதையும் சொல்லிவிட்டது 
வள்ளுவன் எழுத்தாணி …

 பார் போற்றும் சமூக மாற்றத்த ஏற்படுத்தியது 
பரணிக்கோர் கவிஞன் பாரதி எழுத்தாணி … 

இந்நாளில் ஒரு ஆசிரியராய் என் எழுத்தாணியின் ஏக்கம் … 

 உயிர் எழுத்தை நான் எழுத
 உலகத்தை மாணவர் அறிய எழுத்தாணியுடன் பள்ளி செல்ல காத்திருக்கும் எனதருமை
செல்வங்களின் எதிர்காலத்தில் மாற்ற ஏங்குகிறது இந்நாளில் 
என் எழுத்தாணி ….

 ஒன்றும் தெரியாத வயதிலே 
ஒன்றாம் வகுப்பிலே கற்பலகையில் 
குழந்தை கரம் பிடித்து எழுத ஏங்குகிறது இந்நாளில் என் எழுத்தாணி …. 

 கரும்பலகையில் பாடம் எழுத மாணவர்களின் கவனத்தை ஈர்க்க
 நாளும் நாளும் கற்பிக்க ஒரு ஆசிரியராய் ஏங்குகிறது 
 என் எழுத்தாணி ….. 


கொரானா காலத்திலே 
குறைவில்லா கல்வியைக் கொடுக்க 
கொடிய நோயை என் எழுத்தாணியால் 
நசுக்க முடியவில்லை என்று 
அனுதினம் ஏங்கித் தவிக்கின்றது 
என் எழுத்தாணி …. 
 
ஏடுகளின் பக்கங்களை நிரப்ப 
ஏற்றமான பாடத்தைக் கற்பிக்க 
ஏங்குகிறது என் எழுத்தாணி … 

அனுதினமும் அறிவைத் தோண்டி 
தோண்டி மாற்றத்தை ஏற்படுத்த 
ஏங்குகிறது என் எழுத்தாணி ….  

கையேடுகளை மறந்து 
கைப்பேசியில் முடங்கி 
மன அழுத்தத்தில் உழன்று 
இருக்கும் மாணவர் மனதில் 
மாற்றத்தை நாளும் நாளும் 
ஏற்படுத்த துடிக்கிறது
 என் எழுத்தாணி…. 
                   நன்றி 
                               இப்படிக்கு 
                                 உங்கள் 
                        ஆசிரியை ,வெ.சந்திரா தேவி

Post a Comment

0 Comments