இணையம் ஈடில்லா இதயங்களின் இணைப்பு

            இணையம் ஈடில்லா இதயம் 

இணையம் ஈடில்லா 
இதயங்களின் இணைப்பு 
கொரானா காலத்திலே
வலிமையை இழந்து 
முகத்தை மறந்து 
தொலைந்த சொந்தங்கள் 
அடங்கின என் கைப்பேசியில்....  

அலைபேசியின் அழைப்பு மணியில் 
ஆயிரம் உறவுகள் கைகுலுக்கின... 
ஒருவருட கால பந்தம்
200 குழுக்களின் சொந்தம்
2000 மக்கள் ஏகாந்தமானது ... 

கனவுகள் தொலைத்து 
கற்பதை மறந்த என் மாணவக் கண்மணிகளுக்கு 
புலனம் நம் வகுப்பறையானது .. 

வகுப்பறை பாடத்தை 
வலையொளியில் பகிர்ந்தேன் . 
கல்வியை காணொளியில் கற்பித்தேன் கருத்தைக் கவர்ந்தது 
வையகம் கண்டது 
சாதாரண ஆசிரியரை 
சாதிக்கும் ஆசிரியராய்.. 
வலைப்பின்னல் வானளாவிய
கல்விக்கு வழி ....

குவிய வழி கூட்டத்தில்
இணைந்து கவிதை வாசித்தேன் 
கவிக் குழுக்கள் வரவேற்றன 
என்னை பாரதி கண்ட 
புதுமைப்பெண் என்று ....

புத்தகம் மட்டுமே படிக்கத் தெரிந்த எனக்கு இணையம் கற்றுக்கொடுத்தது
மின் புத்தகம் வெளியிட... 
எழுத்தாளராய் உருவம் கொடுத்தது இணையம் எனக்கு.. 
 வலையொலி கண்டேன் 
பேச்சாளராக மாறினேன்.. 
அனுதினம் கற்றேன் அத்தியாயத்தை...  

இன்பத்தை கண்டேன் 
இணையம் கொடுத்த 
என் முன்னேற்றம் கண்டு... 

வெ.சந்திராதேவி ,
ஆசிரியை

Post a Comment

0 Comments